snippets
தொல்காப்பியம்
"நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" "ஓரறிவதுவே உற்றறிவு அதுவே இரண்டறிவு அதுவே அதனொடு நாவேமூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே" - தொல்காப்பியர் |
தலைமுடி
கையாந்தகரை சாறுநா லுபலம் யெடுத்து ரெண்டுபலம் குன்றிமணிப்பருப்பு கலந் தரைத்து ஒருபலம் எள் எண்ணெய்சேர்த் துகாய்ச்சி சீலை வடிகட்டி தினம் பூசப்பா கிழவனுக்கும் குமாரன்போல் சடைகாணும் - அகத்தியர் குணபாடம் |
மாணவர் தன்னேளுச்சி
மாணவர்கள் போராட்டம் (ஜனவரி ௮ - ௨௩, ௨௦௧௭) வெற்றியடைந்ததை முன்னிட்டு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்கவிதை இதோ: வாடிவாசல் திறந்துவிடும் தலைவர்களே இல்லாத அடையாளம் தொன்மங்கள் பீசாவும் பெப்சியுமே சொல்வாங்கி எல்லாரும் ஒருகொம்பு ஆணென்றால் தண்பனியால் சுடுகதிரால் தெருவிருந்து போராடத் சதுராடிக் களம்கண்ட காளைகளை மீட்டெடுக்கக் வரம்புகளை யார்விதித்தார் போராடிச் சாதித்துப் - கவிஞர் வைரமுத்து |
இன்சொல்
வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம்; வேழத்தில் பட்டுஉருவும் கோல்பஞ்சில் பாயாது; நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை, பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும் - ஒளவையார், நல்வழி |
மூச்சுப் பயிற்சி
என்னை அறியாமல் எனக்குள்ளே நீயிருக்க உன்னை யறியாமல் உயிரிழந்தேன் பூரணமே சக்திசிவம் இரண்டாகி தான்முடிவி லொன்றாகி சித்திரமாய் சின்ற திறமறியேன் பூரணமே.
சங்குரெண்டு தாரையொன்று
நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு
ஒருபாதந் தன்னைத் தூக்கி யொருபாதந் தன்னை மாற்றி
இறந்திடு மிருபத் தோரா யிரத் தறுநூறு பேறும் |
அடக்கத்தின் சிறப்பு
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில் ஓடுமீ னோட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாங் கொக்கு - ஔவையார், மூதுரை ௧௬ |
எல்லாம் இறை செயல்
ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும் அன்றி அது வரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினு நிற்கும் எனையாளும் ஈசன் செயல் - ஔவையார் நல்வழி ௨௭ |
ஆறிலிருந்து அறுபதுவரை
உதவி செய்தவன் உயர்ந்த நிலையில் இருந்தால் தான் உதவி பெற்றவன் அதை உயர்வாக பேசுகிறான். |
சிறுவர் மிகிழ அற்புதக் கதைகள்
கடவுளே, தனக்காக வாழ்பவன் உனக்கு பக்தனாகிறான்
ஊருக்காக, அறத்தொடு வாழ்பவனுக்கு நீ பக்தனாகிறாய்
-அரிமதி தென்னகன் |
Avatar
Revenge is like a two-headed rat viper; while you watch your enemy go down, you're being poisoned yourself.. Don't choose revenge.. Let your anger out, then let it go; forgive him. -Aang |